Event Banner

Mother’s Day - Medical Camp @ KIMSHealth

Date: 13, OCT 2023

Time: 8.00 AM

Venue:

Event Details

The Tamil Cultural Confluence, jointly organized by the Unified Tamil Society and TVS Haider (Yafa cargo) Group, was a grand folk song program at the premises of the Vakra DPS - Modern Indian School. The program was held with the participation of Vijay TV Super Singer, "Title Winner" movie playback singer & singer, folk singer, Makkalisai Mannan-Dr.C.Senthilganesh-MFA, People's Selvi.J.Rajaletshmi-MA, M.phil. The program was held with great success. The program was started with the lighting of the lamp, Tamil Thai Vatshu, Qatar National Anthem, led by the Director of the program Ultimate Trading MD Mr. Sakthivel Mahalingam, in the presence of the Chairman of the TVS Haider Group Mr. Haider Ali, and the President of the Unified Tamil Society Mr. Sameer Ahmed. Ms. The program started with the welcome dance of Sahana Nagarajan, the traditional art of Tamils, the drum music of the Thullal Parai music group, the Silambam of the Nagam Pathinaaru group, the Bharata Natyam of dance master Mr. Susan, the LED dance of Mahesh group by Selvi - Raksana, Selvi - Keerthi Varshan, Selvan - Pragadish. Folk music started with the welcome song "Amma Padum Thalattu" by folk singer-Dr.C.Senthil Ganesh-MFA, People's Selvi.J.Rajaletshmi-MA,M.phil. The folk music started with the welcome song "Amma Padum Thalattu". The Marakal dancer Kalaimamani Mr. Madurai Govindaraj performed the Karagam and the folk dance. Along with them, the film songs of singer Navya were performed with great enthusiasm along with the musicians. Special guests on this occasion were Mr. Vinod Nair, General Secretary Mr. Sabit Saheer, ICC Vice President Mr. Subramania Heppagelu, Committee Member Mr. Mohan, Karnataka Association President Mr. Mahesh Gowda, Al Muftah Rent a Car MD Mr. Ziad Usman, DPS-Indian School Facilities Manager Mr. Sasi Shekhar Batra, Qatar Tamil Association Former President Mr. Rama Vijayan, Qatar Munnetra Tamil Association President Mr. Kuppan, International DMK In-charge Mr. Sadhakadulla, Lalpettai Jamaat Former Secretary Mr. Ahmed Rila, Sakhabagal Noolagam Founder Mr. Manikandan, VSI In-charge Mr. Shanmuga Pandian, TWF President Mr. Ismail Nagore, Nagapattinam Jamaat Secretary Mr. Ishaq, UTF President Mr. Dasthagir Sulaiman, Mr. Nassar of Kadayanallur Jamaat, and sponsors, social activists, and the general public participated and celebrated in large numbers. On behalf of the Unified Tamil Association, we would like to express our gratitude to Mr. Yazhini Trading Owner Mr. Yazhini Kumar, who was responsible for the creation of this grand event, Mr. Sakthivel Mahalingam, the Director of the event, Mr. Haider Ali of TVS Haider Group (Yafa Cargo), Mr. Haider Ali of Nysa Trading, Mr. Vijayakumar, and the event organizing team (Core Team), all the sponsors, Mrs. Suji Vijayakumar, Mr. Karthik, who hosted the event, DPS School Administrators Mr. Gopi Varadhan, and Mr. Sasisekar Batra. We would like to express our sincere gratitude to Q.FM Radio, Q.TAMIL Radio, SKY Tamil_NEWS for providing media support for this event, to the fans who were the main reason for the success of this event, and to the members of the United Tamil Council. We are proud to be the United Tamil Council that organized the first great folk song program organized together as Tamils. Even if we fall! Let us live as Tamils!! Thank you. Like this United Tamil Council - Qatar

Information
Unified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646

நிகழ்ச்சி விவரங்கள்

ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் டிவிஸ் ஹைதர் (Yafa cargo) குழுமம் இணைந்து நடத்திய தமிழர்களின் கலாச்சார சங்கமம், மாபெரும் மக்களிசை நிகழ்ச்சி வக்ரா DPS - மாடர்ன் இந்தியன் பள்ளியின் உள்ளரங்கில் விஜய் டிவி சூப்பா் சிங்கா், "டைட்டில் வின்னா்" திரைப்படப் பின்னணிப் பாடகா் & பாடகி,நாட்டுப்புற இணையா், மக்களிசை மன்னன்-Dr.C.செந்தில்கணேஷ்-MFA, மக்கள் செல்வி.J.ராஜலெட்சுமி-MA,M.phil குழுவினரின் கிராமியப்பாடல்கள் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி தமிழ் தாய் வாழ்த்து, கத்தார் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சியின் டைரக்டர் Ultimate Trading MD திரு. சக்திவேல் மகாலிங்கம் தலைமையில், TVS ஹைதர் குழுமத்தின் சேர்மன் திரு. ஹைதர் அலி அவர்கள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் தலைவர் திரு. சமீர் அஹமது இவர்களின் முன்னிலையில் இனிதே நிகழ்ச்சி தொடங்கியது. செல்வி. சஹானா நாகராஜன் அவர்களின் வரவேற்பு நடனம், தமிழர்களின் பாரம்பரிய கலையான துள்ளல் பறை இசை குழுவினரின் பறை இசை, நாகம் பதினாறு குழுவினரின் சிலம்பம், நடன மாஸ்டர் திரு. சூசன் அவர்களின் பரத நாட்டியம், மகேஷ் குழுவினரின் செல்வி - ரக்சனா, செல்வி - கீர்த்தி வர்ஷன், செல்வன் - பிரகதிஷ் LED நடனம் என நிகழ்ச்சி செவ்வனே தொடங்கியது. நாட்டுப்புற இணையா் மக்களிசை மன்னன்-Dr.C.செந்தில் கணேஷ்-MFA, மக்கள் செல்வி.J.ராஜலெட்சுமி-MA,M.phil "அம்மா பாடும் தாலாட்டு" என்ற கிராமிய வரவேற்பு பாடலுடன் மக்களிசை தொடங்கியது. மரக்கால் ஆட்டக்கலைஞர் கலைமாமணி திரு. மதுரை கோவிந்தராஜ் அவர்களின் கரகம் மற்றும் கிராமிய நடனம்.இவர்களுடன் பாடகி நவ்யா அவர்களின் சினிமா பாடல்கள் இசைக் கலைஞர்களோடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ICBF யின் செயல் தலைவர் திரு. வினோத் நாயர் அவர்கள், பொது செயலாளர் திரு. சபித் சாஹீர் அவர்கள், ICC யின் துணை தலைவர் திரு. சுப்பிரமணியா ஹெப்பகெலு அவர்கள், கமிட்டி மெம்பர் திரு. மோகன் அவர்கள், கர்நாடக சங்க தலைவர் திரு. மகேஷ் கவுடா அவர்கள், அல் முஃத்தா ரெண்ட்டே கார் MD திரு. ஜியாத் உஸ்மான் அவர்கள், DPS- இந்தியன் பள்ளியின் Facilities மேனஜர் திரு. சசி சேகர் பத்ரா அவர்கள், கத்தார் தமிழர் சங்கம் முன்னாள் தலைவர் திரு. ராம விஜயன் அவர்கள், கத்தார் முன்னேற்ற தமிழர் சங்கம் தலைவர் திரு. குப்பன் அவர்கள், பன்னாட்டு திமுக பொறுப்பாளர் திரு. சதக்கதுல்லா அவர்கள், லால்பேட்டை ஜமாத் முன்னாள் செயலாளர் திரு. அஹமது ரிலா அவர்கள், சகாபாக்கள் நூலாகம் நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள், விசிக பொறுப்பாளர் திரு. சண்முக பாண்டியன் அவர்கள், TWF தலைவர் திரு. இஸ்மாயில் நாகூர், நாகப்பட்டினம் ஜமாத் செயலாளர் திரு. இஷாக் அவர்கள், UTF தலைவர் திரு. தஸ்தகீர் சுலைமான், கடையநல்லூர் ஜமாத் திரு. நாசர் அவர்கள், மற்றும் ஸ்பான்ஸர்ஸ், சமூக செயல்பாட்டாளர்கள், பொது மக்கள் என வெகுசன மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்த பிரமாண்டமான நிகழ்ச்சி உருவாக காரணமாக இருந்த யாழினி டிரேடிங் உரிமையாளர் திரு. யாழினி குமார் அவர்களுக்கும், நிகழ்ச்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று நிகழ்ச்சி அருமையாக செதுக்கிய நிகழ்ச்சியின் டைரக்டர், Ultimate டிரேடிங் MD திரு. சக்திவேல் மகாலிங்கம் அவர்களுக்கும், நிகழ்ச்சியை இணைந்து வழங்கிய TVS ஹைதர் குழுமம் (Yafa Cargo) திரு. ஹைதர் அலி அவர்களுக்கும், Nysa டிரேடிங் MD. திரு. விஜயக்குமார் அவர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு (Core Team), அனைத்து ஸ்பான்சார்ஸ்களுக்கும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திருமதி. சுஜி விஜயகுமார் அவர்களுக்கும், திரு. கார்த்திக் அவர்களுக்கும்,DPS பள்ளி நிர்வாகிகள் திரு.கோபி வரதன் அவர்களுக்கும், திரு.சசிசேகர் பாத்ரா அவர்களுக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிகழ்ச்சிக்கு மீடியா ஆதரவு வழங்கிய Q.FM ரேடியோ,Q.TAMIL ரேடியோ, SKY தமிழ்_NEWSக்கும், இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைய முக்கிய காரணமாக இருந்த இரசிக பெருமக்களுக்கும் ,ஒருங்கிணைந்த தமிழர் பேரவை உறுப்பினர்களுக்கும் ,ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின்நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழர்களாக இணைந்து நடத்திய மாபெரும் முதல் மக்களிசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது, ஒருங்கிணை ந்த தமிழர் பேரவை என்பதில் பெருமை கொள்கிறோம். வீழ்வது நாமாக இருந்தாலும்! வாழ்வது தமிழாக இருக்கட்டும்!!. நன்றி. இப்படிக்கு ஒருங்கிணைந்த தமிழர் பேரவை - கத்தார்

தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal