Event Details
Victory after a week of fierce struggle. #Successful in repatriating the body of a fisherman brother who died in a boat accident, Mr. Sasikumar's body was repatriated yesterday (25.07.2021) after a week-long struggle. A fisherman brother from Periyakuppam in Cuddalore district, Mr. Sasikumar, died in a boat accident in Qatar on 09.07.2021. The fishermen's representative brother, Mr. Robert made a request to the administrators of the Qatar Unified Tamil Forum, an associate organization of the ICBF (Indian Community Benevolent Forum - Qatar) operating under the Indian Embassy in Qatar (Embassy of India, Doha) on 17.07.2021. Based on that, the administrators of the #Unified_Tamil_Forum, Deputy Secretary Mr. Kathir Ahmed, Secretary Mr. Valiullah, President Mr. Sameer Ahmed, Vice President Mr. Ibrahim, Treasurer Mr. Sivakumar, Deputy Secretary Mr. Vijayakumar, and Donation Coordinator Mr. Jafar Sadiq, paid special attention to the process of sending the body of the deceased fisherman brother Mr. Sasikumar to his family in accordance with the legal plan of Qatar, with the help of the Indian Embassy. The Secretary of the #Unified_Tamil_Forum, Mr. Valiullah, went to his homeland. The body of the deceased fisherman brother Mr. Sasikumar was handed over to his family this morning (26.07.21). The Secretary of the #United_Tamil_Assembly Mr. Valiullah handed it over to his family in his homeland. Like this #United_Tamil_Assembly #Qatar
Information
Unified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646
நிகழ்ச்சி விவரங்கள்
ஒரு வார கடுமையான போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி. #விசைப்படகு_விபத்தில்_மரணம் அடைந்த மீனவ சகோதரரின் உடலை தாயகத்திற்கு அனுப்பிவைக்கும் பணியில் தொடர்ந்து ஒரு வார போராட்டத்தில் வெற்றிபெற்று நேற்று (25.07.2021) திரு. சசிக்குமார் அவர்கள் உடல் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியகுப்பதை சேர்ந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார் அவர்கள் கடந்த 09.07.2021 அன்று கத்தாரில் நடந்த விசைப்படகு விபத்தில் இறந்துவிட்டார். அன்னாரின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மீனவ பிரதிநிதி சகோதரர் திரு. ராபர்ட் அவர்கள் 17.07.2021 அன்று இந்திய தூதகரத்தில் (India in Qatar (Embassy of India, Doha) கீழ் செயல்படும் ICBF (Indian Community Benevolent Forum - Qatar) அமைப்பின் அசோசியேட் அமைப்பான கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் தாயகத்திற்கு அனுப்பும் பணியில் #ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவையின் நிர்வாகிகள் துணை செயலாளர் திரு. கதிர் அகமது, செயலாளர் திரு. வலியுல்லாஹ், தலைவர் திரு. சமீர் அகமது, துணை தலைவர் திரு. இப்ராஹிம், பொருளாளர் திரு. சிவக்குமார், துணை செயலாளர் திரு. விஜயக்குமார், நன்கொடை ஒருங்கிணைப்பாளர் திரு.ஜாபர் சாதிக் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தி இந்திய தூதகரத்தின் உதவியுடன் கத்தாரின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு மறைந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார் அவர்களின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியில் #ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவையின் செயலாளர் திரு. வலியுல்லாஹ் அவர்கள் தாயகம் சென்று. இன்று (26.07.21) காலை இறந்த மீனவ சகோதரர் திரு. சசிக்குமார் அவர்களின் உடலை தாயகத்தில் அவரின் குடும்பத்தினரிடம் #ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவையின் செயலாளர் திரு. வலியுல்லாஹ் அவர்கள் ஒப்படைத்தார். இப்படிக்கு #ஒருங்கிணைந்த_தமிழர்_பேரவை #கத்தார்
தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646