Event Banner

Sakthivel from Thittakudi -Oct 2024

Date: 06, OCT 2024

Time:

Venue:

Event Details

Greetings to the Unified Tamils ​​ Regarding the fact that a brother named Sakthivel from Thittakudi, Cuddalore district was brought to Qatar for work and sent to Saudi Arabia a few days ago, Brother Elangovan contacted the affected brother on 06/10/2024 in the name of information and continued efforts to send him to his homeland, Brother Sakthivel was sent home this morning During this event, the administrators of the Unified Tamils ​​Council Brother Valiullah Brother Kathir Ahmed Brother Vijayakumar. (ICBF) Advisory Board Member Annan Rama Selvam was present, In this joint effort, the dedication and contribution of Sakthivel's relative Velmurugan, who provided full cooperation, was very helpful and this joint effort was taken with the support of the Indian Embassy ICBF. Also: Brother Qatar Abdul Rasheed (NRTA) Kurumpur Tahir (VTNS) Their joint effort And with the help and support of all Tamils, the brother was rescued and sent home. In particular: Information given by the affected brother Dense desert There is no proper place to stay. Desert soil to sleep. Camel drinking water to drink. Natural disasters. You have to walk at least 2 kilometers to get rid of. No proper sleep. Walking in the desert soil, both my brother's legs got infected and it was a very bad situation. I never even dreamed that I would recover from such a situation, Sir, in particular, Brother Sakthivel It was revealed during the in-person investigation that the fraud was committed by relying on agents in the homeland, not by the agent in Qatar, and not by Bangalore Travels, with whom he had contracted. However, as soon as the brother wanted to go to his homeland, the contribution and dedication of the sponsor and Bangalore Travels company that supported him were beyond words. The lessons we can learn from this news are that as long as there are cheaters, there will always be cheaters. The government alone has the power to legally suppress and punish them. The practice of punishing the wrongdoer without discrimination is the best practice. Pressure has been exerted to take such measures continuously. On behalf of the Unified Tamil Federation, we express our gratitude and appreciation to all the good hearts who participated

Information
Unified Tamil Council – Qatar
Contact:
📧 Email otpqatar@gmail.com
📞 Phone number +97459932646

நிகழ்ச்சி விவரங்கள்

ஒருங்கிணைந்த தமிழருக்கு வணக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சகோதரர் சக்திவேல் என்பவர் கத்தாருக்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டு சவுதிக்கு அனுப்பியது தொடர்பாக, சகோதரர் இளங்கோவன் அவர்கள் 06/10/2024 அன்று தகவல் கொடுத்ததின் பெயரில் பாதிக்கப்பட்ட சகோதரரை தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரை தாய் நாட்டுக்கு அனுப்பும் முயற்சியின் விளைவாக, சகோதரர் சக்திவேல் இன்று அதிகாலை தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார் இந்த நிகழ்வின் போது, ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் சகோதரர் வலியுல்லாஹ் சகோதரர் கதிர் அஹ்மத் சகோதரர் விஜயகுமார். (ICBF) இன் ஆலோசனைக் குழு உறுப்பினர் அண்ணன் ராம செல்வம் அவர்கள் உடன் இருந்தனர், இந்த கூட்டு முயற்சியில் முழு ஒத்துழைப்பு வழங்கிய சக்திவேலின் உறவினரான வேல்முருகன் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பு மிக உறுதுணையாக இருந்தது மற்றும் இந்திய தூதரகம் ICBF துணையோடு இந்த கூட்டு முயற்சி எடுக்கப்பட்டது மேலும்: அண்ணன் கத்தார் அப்துல் ரஷீத் (NRTA) குரும்பூர் தாஹிர் (VTNS) இவர்களின் கூட்டு முயற்சி மற்றும் அனைத்து தமிழர்களின் உதவியோடும் ஆதரவோடும் சகோதரர் மீட்டெடுக்கப்பட்டு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார் குறிப்பாக: பாதிக்கப்பட்ட சகோதரர் கொடுத்த தகவல் அடர்ந்த பாலைவனம் இருப்பதற்கு சரியான இருப்பிடம் கிடையாது உறங்குவதற்கு பாலைவன மண் குடிப்பதற்கு ஒட்டகம் அருந்தும் குடிநீர் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் சரியான உறக்கம் கிடையாது பாலை மண்ணில் நடந்து நடந்து சகோதரரின் இரண்டு கால்களும் தொற்று ஏற்பட்டு மிக மோசமான ஒரு நிலைமை அத்தகைய நிலைமையிலிருந்து நான் மீண்டு வருவேன் என்று கனவில் கூட நினைக்கல சார் என்று எடுத்துரைத்தார், குறிப்பாக சகோதரர் சக்திவேல் ஏமாற்றப்பட்டது தாயகத்தில் இருக்கும் முகவர்களை நம்பி தானே தவிர கத்தாரில் இருக்கும் முகவரல் அல்ல அவர் ஒப்பந்தம் செய்து கொண்ட பெங்களூர் டிராவல்ஸ் அல்ல என்பது நேரில் விசாரிக்கும் பொழுது தெரிய வந்தது, இருப்பினும் சகோதரர் தாய் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றவுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்பான்சர் மற்றும் பெங்களூர் டிராவல்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் சொல்லில் அடங்காதது, இந்த செய்தியில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் படிப்பினைகள் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களை சட்டபூர்வமாக ஒடுக்கவும் மற்றும் தண்டிக்கவும் அதிகாரம் அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது தவறு செய்பவரை பாரபட்சம் இன்றி தண்டிக்கும் நடைமுறையே ஒரு ஆகச் சிறந்த நடைமுறையாகும் தொடர்ந்து அவ்வாறான நடவடிக்கைகளும் எடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது கரம் கோர்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஒருங்கிணைந்த தமிழர் பேரவையின் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்,

தகவல்
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை – கத்தார்
தொடர்பு கொள்ள:
📧 மின்னஞ்சல் otpqatar@gmail.com
📞 தொலைபேசி எண் +97459932646

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal